Top Ad 728x90

,

நீ எனக்கில்லை

vel tech logo
ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஎன் தந்தை உமிழ்ந்த விந்தில் நீ இல்லைஎன் தாய்  கருப்பையில் தோன்றிய கருமுட்டையில் நீ இல்லைஇரண்டும் இணைந்து உருவான கருவிலும் நீ இடம் பிடிக்கவில்லைபெண் குழந்தையாய் பூவுலகில் நான் பிறந்த போது நீ எனக்கு இல்லைபத்து மாதம் சுமந்தவளின் மடியில் பால் குடித்த போது நீ என்னிடம் இல்லைமழலையாய் நான் மலர்ந்த போது நீ எனக்கு இல்லைதரணியில் நான் தவழ்ந்து நடந்த போது நீ என்னிடம் இல்லைபாலக வயதில் பள்ளி செல்லும் போது நீ எனக்கு இல்லை பேதையாய் நான் பாரில் உலாவந்த போது நீ என்னிடம் இல்லை

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைபத்து வயதில் மெதுவாய் எனக்குளிருந்து நீ எட்டிப்பார்த்தாய்ஏதோ என் மேனியின் மேல் மெல்ல எழும்பக் கண்டேன்என் கழுத்துக்கும் வயிற்றுக்கும் இடையில் சில வினோத வித்தியாசங்களை கண்டு வியந்தேன்ஜோடியாய் வித்தியாசங்கள் இருந்தாலும், ஜோடிகளுக்குள் வேறுபாடுகள் இல்லை என்று தெளிந்தேன்புறத்திலும் அகத்திலும் மாற்றங்களை உணர்ந்தேன்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஉன்னை தொட்டுப்பார்த்த எனக்கு தொடக்கத்தில் ஒன்றும் புரியவில்லைகுழந்தையாய் இருந்த என்னை குழம்பச்செய்தாய்ஏதும் அறியாத என்னை அச்சத்தில் ஆழ்த்தினாய்ஒன்றும் தெரியாத வயதிலிருந்த எனக்கு புரியாத புதிரானாய்பெற்றவளிடமும் இதைப்பற்றி பேசமுடியவில்லைஉடன்பிறப்புகளிடம் உன்னைப்பற்றி உரையாடமுடியவில்லைகூடிவிளையாடிய தோழிகளிடமும் கேட்கமுடியவில்லை

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஉணர்ந்தேன் நான் இது பருவகாலத்தில் உடலில் ஏற்படும் உருவமாற்றமென்றுமழலையாய் இருந்த நான் மங்கையாக மாறப்போகிறேனென்றுமொட்டாய் இருந்த நான் அழகிய மலராய் மலரப்போகிறேனென்றுசறுக்குமரம் ஆடிய சிறுக்கி நான் சமையப்போகிறேனென்றுபதுமை நான் பெரியவளாய் ஆகப்போகிறேனென்றுபூப்பெய்து பெண்மையின் முழுமையை அடையப்போகிறேனென்றுஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைமுதன்முதலில் ரவிக்கை அணிந்த போது எத்தனை எத்தனை குதூகலங்கல் எனக்குள்மாராப்பு கொண்டு உன்னை மறைத்த போது எத்தனை எத்தனை மகிழ்ச்சிகள் எனக்குள்துப்பட்டா தோல்பட்டையிலிருந்து சரியாமல் இருக்க எத்தனை எத்தனை துடிதுடிப்புகள் எனக்குள்காளையர்கள் கடைக்கண்ணால் உன்னை கண்டபோது எத்தனை எத்தனை கர்வங்கள் எனக்குள்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைமுப்பதுகளின் தொடக்கத்தில் களையாய் முளைத்தன கட்டிகள் சில உங்கள் இருவருக்குள்களைதானே என்று கவனிக்காமல் இருந்தபோது, மெதுவாய் அவைகள் மலையாய் மாறினகேன்சராய் இருக்கக்கூடாது என்று குலசாமிக்கு கும்பிட்டுக்கொண்டேன்பிரச்சனையேதும் இல்லாமலிருந்தால் பாலாபிஷேகம் செய்வதாகவும் பிராத்தித்துக்கொண்டேன்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைபயாப்சி முடிவுகள் பக்கென்று என் மனதை பதறச்செய்தனபுரண்டுப்போனது என் வாழ்க்கை புற்றுநோய் என்ற மருத்துவர்களின் வார்த்தையை கேட்டுஇடிந்துப்போனேன் நான் இது நான்காம் நிலை என்ற இடியை சொன்ன போது மெல்ல மெல்ல வளர்ந்த உங்களை – ஒரேநாளில் மேசக்டாமி செய்து மரணிக்கச்செய்தனர்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைவருடங்களாய் வளர்ந்த உங்களை, அறுத்துப்போட்டனர் அரைமணி நேரத்தில் இணைப்பிரியா இரட்டையர்களாய் இருந்த உங்களின்  இறுதி கூட இணைந்தே இருந்ததுநீங்கள் வசித்த சுவடுகள் கூட தெரியாமல் சுவராய் மாறின அவ்விடங்கள்நொந்து நூலாயானேன், நீங்களில்லாத நிழல்பிம்பத்தை நிலைக்கண்ணாடியில் கண்ட போது எஞ்சிய காலத்திற்கு பஞ்சை கொண்டு நீங்கள் உள்ளதாய் உலகிற்கு பாசாங்கு காட்டச்சொன்னார்கள்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஎன்னவன் மட்டும் பார்த்த உங்களை ஏமாந்து இழந்துவிட்டேன்பருவத்தில் பார்த்துப்பார்த்து வளர்த்த உங்களை பாவிநான் பரிகொடுத்துவிட்டேன் கட்டியவன் மட்டும் கண்ட உங்களை களவில் தொலைத்துவிட்டேன் அறுக்கப்பட்டது நீங்கள் மட்டுமல்ல என் பெண்மையின் பாதியும் தான்

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைகட்டில் சீண்டல்களில் இனி உங்களுக்கு  இடமில்லைகணவனின் பசிக்கு இனி ருசியான உணவில்லைபள்ளியறையின் பாலுணர்ச்சிகளில் இனி உங்களுக்கு பங்கு இல்லைதாலிக்கட்டியவனின் தாம்பத்தியத்துக்கு இனி தகுந்த தீணியுமில்லைபெறப்போகும் குழந்தைக்கு தாய்ப்பாலும் இல்லை

ஈன்றெடுத்த போதும் நீ எனக்கில்லை, இன்றும் நீ என்னிடம் இல்லைஇடைப்பட்ட காலத்தில் இடைச்சறுகளாய் வந்து நீ இல்லாமல் போனாலும்கரம் பிடித்த என்னவன் எக்காலத்திலும் நிரந்தரமாய் என்னுடன் உள்ளான்அன்பானவன் சொன்னான், அழகொன்றும் அதில் இல்லை அகத்தில்தான் உள்ளதென்றுஆலம் விழுதுகள் போல் ஆயிரமாயிரம் சொந்தங்கள் என்னை ஆதரிக்கவும் அரவணைக்கவும் இருக்க என் அங்கமாயிருந்த உங்களை இழந்ததற்காக இனியும் நான் அழப்போவதில்லைஏ பெண்ணினமே, என்னைப்போல் இனி யாரும் இவ்வுலகில் ஏமாறாதீர்கள்காலையில் குளிக்கும்போது சற்றே சில நிமிடங்கள் ஒதுக்கி சுயபரிசோதனை செய்யலாமேகாரணம் ஏதும் தேவையில்லை, வெறும் மரபணு மாற்றத்தாலேயே இது வரலாம் என்பதை புரிந்துக்கொள்ளலாமே உங்களின் மறபில் இந்நோய் இல்லாவிடிலும், வருடம் இருமுறை மேமோகிராம் செய்துக்கொள்ளலாமே

ஈன்றெடுத்த போது மார்பகங்கள்  எனக்கில்லை, இன்று மார்பகங்கள் என்னிடம் இல்லை
இவள்மயிரிழையில் மார்பக புற்றுநோயிலுருந்து உயிர் பிழைத்தவள்,
குறிப்பு: அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை அகற்றுதலே Masectomy ஆகும்

0 Comments:

Post a Comment

Top Ad 728x90