கருவறை நுழைந்தேன்
என் கல்லறை நிறனயக்கப்பட்டது...!
வேகமாய் வளர நினைத்தேன்
விஷம் கொடுத்து விலக்க நினைத்தாய்..!
மடிபுக ஆசைக்கொண்டேன் நீயோ
ஓய்ந்து போய் படுக்கையில் வீழ்ந்தாய்..!
மன்னகம் நான் தொடுகையிலே
புது மனமகன்களோடு நீ கிடந்தாய்..!
பாசத்திற்கு நான் ஏங்கி தவித்தேன்..
பலரோடு பந்தி பரிமாரினாய்..!
பள்ளியில் சேர்த்து எனை பாடம் படிக்க அனுப்பினாய்
பள்ளி பாடம் தராத அனுபவம் என் வாழ்க்கை பாடம் தந்ததடி..!
ஓடி விளையாடும் வயதினிலே...
நான் ஓய்ந்து போனேன் நோயாலே..!
நீ தந்த உறவுகள் ஒன்றும் இல்லை.
இதோ! உன்னிடமே வர விழைக்கிறேன்..!
அங்கேனும் எனக்காய்
வாழ்ந்திடுவாயா..??
0 Comments:
Post a Comment