Top Ad 728x90

யார் நீ...??

கைகட்டு பூட்டப்பட்ட பெண் படம்
இன்பத்தின் புகலிடமாய் என்னுகின்ற மனிதர்களிடையே யார் நீ...??
நித்தம் உனை பேணி காக்க உற்றார் உறவினர் வேண்டுமாயின்...
நின் சத்தம் ஒடுங்கி சிந்தை களங்கி வாழ்வதென்ன வாழ்க்கையோ...?
என் பெண்ணே யார் நீ...??
கல்விகள் நீ பயின்று களங்கள் பல புகுந்து சாதனை புரிந்தவள்...
புது சரித்திரம் தநிதிட...
ஆண்மகனது முகவுரை தேடுவது ஏனோ??
அடுகலையில் அவிந்து போனாய். பின்
அருள் வாழ்வு அவனுடன் என்றாய்.
தொழில் தேட மனமில்லை ஏனோ புகுமனை அவசரமாய் புகுந்தாய்..
பிள்ளை பெறும் இயந்திரம் ஆனாய்... ஏனோ
உன் உலகை நான்கு சுற்றில் வரைந்து போனாய்...
வேதனை. வேதனை. தினம் வேதனை. நின்மேல் கொண்ட காதல் கறைந்ததுவே நீ பெறுத்த உருவம் என்றான்..
உன் தங்கையை பார் ஆளும் பன்முக அழகி என்றான்.
உந்தன் பிழை என்று உள்ளுக்குள் நீ மறுக...
ஏச்சுகளையும் பேச்சுக்களையும் உன்மேல் வீசி...
ஏ.சி அறைக்குள் பிழைத்தான் பேசி பேசி சுகவாசி...
என்னடி மடமை. இன்னும் புரியலையோ?
போதும் எழுநது வா வழிகள் கிடைக்கலையோ??
இன்னும் எத்தனை நாளுக்கு தான் ஊரை சுமந்திடுவாய்....
இங்கு எவரும் உத்தமம் இல்லை உன் பழி பேச. வாராய்!
தோழி வசந்தங்கள் காண. வலைந்தது போதும் இனியேனும் சுயமாய் சுவாசி...
அஞ்சியது தீது அதை அறவே அகற்று.
அனலாய் புறப்படு உன் அடையாளம் அதை நிலைநாட்டு..
கணவனால் இழிவுபடுத்தபட்டு மன உளச்சாலால்
தினம் வெந்து நொந்து சாகும் தோழிகளுக்காக.  
- சோபியா மாலதி 

0 Comments:

Post a Comment

Top Ad 728x90