பசுமை ஆடை உடுத்தி புன்னகையின் தேசமாய்
பொழிந்தனள் என் அன்னை.. இயற்கை அன்னை.
பலவகை உயிர்கள் தன்னகத்தே பிடித்து
உயிர் கோலாய் உன்னதமாய் சுழன்றவள்
என் அன்னை.. இயற்கை அன்னை...!
மனிதர்களை தம் வளங்களால் வசிகரித்தவள்
இன்று மனித மிருகங்களால் தன் அழகை தொலைத்து விட்டாள்..!
காடுகள் அழித்தோம் கடும் விளைவுகள் தோன்றின.
வீடுகள் இழந்தன வன விலங்குகள் சரன் புக இடமின்றி தவித்ததன...!
மரங்களை வெட்டினோம்
மழைதனை மலை கடந்து ஓடவிட்டோம்...!
நெகிழியை நிரப்பினோம்
இங்கு நன்னிலம் மாசுப்படுத்தினோம்...!
கரியமில வாவுயை வாகனங்களால் வடம் பிடித்து இழுத்தோம்
ஓசோனை பெரும் ஓட்டை இட்டு பார்க்கிறோம்..!
சூரிய கதிர் கொண்டு பல நோய்கள் பெற்றோம்
அதில் இளம் தலைமுறைகளை சுட்டெரித்தோம்...!
மாசுகள் நிறைந்திட தூய நிரை மறந்தே போனோம்.
ஹைற்றோகார்பன் வந்தால் நிலம் உயிர்நீர் இழக்கும்.
உயிர்கள் குருதியை இழக்கும் என்ற உண்மையை உனர்வோம்..!.
மலைகளும் கடல்களும் மலடு ஆகும்
பெரும் நில அதிர்வுகள் மட்டுமே இங்கு சுவடுகள் ஆகும்..!
பசியும் பஞ்சமும் மேலோங்கும்.
அதில் மனித இனம் மெல்லச் சாகும்...!
ஏ.. மனிதா! உணர்ந்து கொள் மனிதம் உன் குடும்ப சொத்தில்லை.
அதை இயற்கையோடும் கொஞ்சம் பங்கிடு..!.
மனிதா! பூமி உன் வீடு அல்ல..
உன் பிள்ளை உனக்கு தந்த கூடு அதை சரியாக திருப்பி கொடு...!
மனிதா! காடுகளை சற்றே வாழ விடு. மலைகளை சற்று சுவாசிக்க விடு.. கடல்களை சற்று இளைபார விடு..!
நதிகள் கொஞ்சம் ஓடட்டும்.
அறுவிகள் கொஞ்சம் பொங்கட்டும்.
ஆறுகள் தன் மனல் குஞ்சுகளை மேல்ல வருடட்டும்...!
மனிதர்கள் இயற்க்கையோடு அகிம்சையை பழகட்டும்..
என் அன்பு சமுகமே உறுதி எடு.
உன் உள்ளம் தொடு.
இயற்கொடு இனி உறவு என்று பாடு.
பழமை திரும்பு இயற்கை அன்னை என் அன்னை என்று நினைத்து போற்று..!
இயற்கையை நேசி. அதுவே இனி நம் எதிர்காலம் என்று யோசி...!!
0 Comments:
Post a Comment