தமிழ் தமிழென்று நாள்தோறும் பாடிடுவோம்
தமிழர் நாமென்று தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவோம்..!
உலக உயிர்கள் வாழ்ந்திட உணவு தந்து உதவிடும்
உழவுதனை போற்றி மகிழ்ந்திடுவோம்..!
இயற்கை பேரிடர் நாட்களிலே உழவன் படும்
துன்பம் உணர்ந்து உணவு பொருட்களை வீண் செய்யாது
உண்டு மகிழ்ந்து வாழ்ந்திடுவோம்...!
உழவுக்கு உயிர்தரும் நீர்நிலை உயர்ந்திட
காணகம் காத்து கார்மேகம் தரும் மழை பெறுவோம்...!
அவ்வப்போது தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை
அடிப்படை பிரச்சனை ஆக்கிவிட்டோம் அகற்றிடுவோம் அதை...!
பகுத்துண்டு வாழும் தமிழனது அகராதியில்
பஞ்சம் என்ற சொல்லா? நீக்கிடுவோம் அதை...!
ஏழை பணக்காரன் என்ற ஏற்றதாழ்வு இனி எதற்கு?
என்ற மனித நேயத்தை காத்து வாழ்ந்திடுவோம்.
நாளை இந்தியா வள்ளரசு என்னும் சொல்லை செயலாக்கி
செம்மையாய் வாழ்ந்திடுவோம் தலைநிமிர்வோம்
தமிழனென்பதில் தமிழனாக...!
0 Comments:
Post a Comment