சந்திரயான் II விலிருந்து வெளிப்பட்ட பின்னர் நிலவில் விழுந்த விக்ரம் Landerஐ இருநாட்கள் கழிந்து கண்டெடுக்கப்பட்ட போது எழுதப்பட்டது:
விக்ரமே எழுந்துவா
பேசு விக்ரமே பேசு
தொட்டுவிடும் தூரத்தில் நீ இருந்த போது தொலைந்துவிட்டாய்
உனை காணாத இரு நாட்களும் இந்தியாவே இருளில் மூழ்கியது
உனை கண்டெடுத்தபின் பாரதமே பரவசமடைந்தது
உன் பேச்சை கேட்க 120 கோடி இந்தியனும் காத்துக்கொண்டிருக்கிறான்
பேசு விக்ரமே பேசு
பாரிலுள்ளோர் கண்ணீரை சிவனால் மட்டுமே துடைக்க முடியும் – ஆனால்
என் சிவனின் கண்ணீரை நீ மட்டுமே துடைக்க முடியும்
என் விஞ்ஞானியின் சோகத்தை உன்னால் மட்டுமே சுகமாய் மாற்ற முடியும்
அன்னை தேசமே ஒற்றைப்புள்ளி கவனமாய் உன் பேச்சை கேட்க காத்துக்கொண்டிருக்கிறது
பேசு விக்ரமே பேசு
விக்ரம் என்று நீ பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது
ஒன்பது வருடம் வெற்றியை ருசிக்காத விரக்தியிலிருந்த என் விக்ரம்
சேது படத்தில் சியானாய் சீறி எழுந்தான்
தமிழ் திரையுலகில் சாமியாய் இரந்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறான்
திமிறி எழுந்த என் விக்ரமனை இன்று வரை யாரும் தோற்க்கடிக்க முடியவில்லை
விக்ரமன்களுக்கு தோல்வி ஒன்றும் புதியதொன்றுமில்லை
பேசு விக்ரமே பேசு
குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு கண்ணனே தேரோட்டி – அதுபோல்
இன்று பிரஞ்யானுக்கு நீயே தேரோட்டி என்பதை நினைவில் கொள்
அர்ஜுனன் தடம் தவறிய போது விஸ்வரூபம் கொண்டு திருத்தியவன் கண்ணனே - ஆனால்
இன்று பிரஞ்யானை வழிநடத்த வேண்டிய நீயே படுத்து கிடப்பது சரியா?
துவாபர யுகத்தில் ஓர் கண்ணன் போல, கலியுகத்தில் ஓர் விக்ரம் என்பதை சிந்தையில் நிறுத்து
பேசு விக்ரமே பேசு
இரளை கண்டு மிரளாதே, பள்ளத்தை கண்டு பயப்படாதே
உறங்காமல் உன்னை அல்லும் பகலும் காவலனாய் ஒருவன் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறான் என்பதை நினைவில் கொள்
உரக்க பேச முடியாமல் பலவீனமாய் நீ இருந்தால்
உறங்காமல் உனை சுற்றிவரும் அவனிடமாவது பேசு
நீ சுமந்துகொண்டிருக்கும் பிரஞ்யானை பிரசவி
நீ வீறுகொண்டு எழுந்தால் விண்வெளி வரலாற்றில் இடம்பிடிப்பாய்
விழுந்தே கிடந்தால் வீணாய்தான் போவாய்
பேசு விக்ரமே பேசு
0 Comments:
Post a Comment