மரணம் என்னை தழுவினாலும்
என் மனம் இனி உன்னை ஏற்காது.
தீ அது என்னை சுட்டதை போல
நிதம் சுட்ட உன் நாவு கருகினாலும்
என் இமை இனி நீர் கசியாது.
விலங்கிட்ட உன் கைகள் இனி
வீழ்ந்து போனாலும் என் கரம் உனை தாங்காது
எட்டி உதைத்த உன் கால்கள் இனி வலு குன்றினாலும்
என் கால்கள் உனை தாங்க ஓடி வராது.
மன்னிப்பு கடவுளின் சாதி எனில் இங்கு நான்
தீண்ட தகாதவளாகவே இருக்க விரும்புகிறேன்.
- சோபியா மாலதி
0 Comments:
Post a Comment