உன் விழி வழி வந்த ஒரு துளி நீர்
இந்த பிரபஞ்சத்தை நிறைத்திடுமாயின் அழுது விடு
அகிலம் செழித்திட மனிதம் தழைத்திட
மரங்கள் மகிழ்ந்திட மண் குளிர்ந்திட.
வாரி அனைக்க தயக்கமாயின்
வந்து முத்தமிட நடுக்கம் ஏனோ?
ஓசை இன்றி உள்நுழை
உமிழ்ந்து விடு உன் மிச்சங்களை.
ஓய்ந்து போகாதே ஒலிர்வதை நிறுத்து,
வானம் வசப்படும் வரை நான் இசைந்திடும் வரை நீ
நடம் ஆடு என்னுள் விழுந்தாடு வா!.
உன் விழி வழி வரும் ஒரு துளி அது
போதாது எனக்கு பாய்ந்து வரும் காட்டாறாய்,
தேடு என்னை வந்து சேரு மழையே!!
- சோபியா மாலதி
0 Comments:
Post a Comment