கோழையின் வழி வந்த கொடுறர்களே...!
எம் பெண்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு எரித்து உண்பீர்கள்...?
அன்பையும் அறத்தையும் அள்ளி பிசைந்து ஊட்டிய உன் அன்னை
பெண் தான் என ஏன் மறதி கொண்டீர்...?
மங்கையர் மனங்கள் நீவீர் உதிர்த்து
விலையாடும் மலர்கள் என்று நினைத்தீரோ..?
மந்திகளே! பிந்தி வரும் சங்கதியையும்
முன் கதியில் கூற வல்லவள் என் பெண்கள்....
தம் குருதி பாலென மாற்றி வீரம் நிறைத்து சொறிந்தனள் உமக்கு...
பேடி தனமாய் ஓடி ஒலிந்து பெட்ரோல் ஊற்றியும்...
திராவகம் வீசியும் காட்டுவீரோ? உம் வீரத்தை?
வார்த்தை பொறுக்காத வல்லூருகளே நீங்கள்...
வஞ்சிப்பது எம் மாதர் குளத்தையோ?
அறிவில்லா அறக்கர்களே... வாழ்க்கையின் மேடு பள்ளங்களை
புரிந்து கொள்ள முடியாத உமக்கு கல்வி எதற்கு?
வாழ்வின் வலைவு சூளிவுகளில் பயணிக்க மறுக்கும்
உனக்கு ஹைடெக் வாழ்க்கை எதற்கு?
பெண்ணை வெரும் போக பொருளாய் நினைக்கும் ஆண் இனமே...
ஒன்றை மறந்திட வேண்டாம்...
உங்களுக்கு தான் வீரத்தை காட்ட வெடிகுண்டுகள் தேவை.
பேடி தனத்தை காட்ட பெட்ரோல் தேவை...
ஆனால் எமக்கோ வீட்டில் ஓருபிடி அரிசி போதும்....
நாங்கள் கோழைகள் அல்ல உம்மை கொன்று குவித்து
எம் வாழ்வை அழித்துக்கொள்ள...
ஓ! வீர தாய்களே... வீனாய் போன உம் மகன்களை.. உம் சகோதரர்களை.. வீட்டிலேயே கட்டி போடுங்கள் அல்லது கொன்று போடுங்கள்...
இல்லையெனில் எம் வீர நாயகிகள் உம்மை வெட்டி போட நேரிடும்....
0 Comments:
Post a Comment