நீ விட்டு விலகுவதால் நான் ஓய்ந்து போவதில்லை.
நீ தாவி குதிப்பதால் நான் புதைந்து போவதில்லை.
நீ ஓடி ஒளிவதால் நான் வீழ்ந்து கிடப்பதில்லை.
என் பூத உடல் அழுகுவதால் என் ஜீவன் அழிவதில்லை
மரணமே மயங்கி போ நீ மல்யுத்தம் செய்ய நான் ஆல் இல்லை
மரணமே ஒதுங்கி போ நீ வருவதை கண்டு நான் துவண்டு போவதில்லை.
வந்து வாரி அனைப்பதாயினும் என் அனுமதி கேள்.
என்னை பீடிப்பவன் நீ அல்ல.
என்றும் உன்னை ஆள்பவள் நான்....
- சோபியா மாலதி
0 Comments:
Post a Comment